STORYMIRROR

DEENADAYALAN N

Abstract

4  

DEENADAYALAN N

Abstract

அணைப்பு!

அணைப்பு!

1 min
405




அணைப்புகள் பல விதம்

ஒவ்வொன்றும் ஒரு விதம்

அணைக்கப் படும் முன்பே

அறிந்து கொள்வது உத்தமம்!



அம்மா அணைத்தால்

அதன் பெயர் அன்பு

அப்பா அணைத்தால்

அதன் பெயர் பாசம்

இல்லான்/ள் அணைத்தால்

அதன் பெயர் இன்பம்

அல்லாதோர் அணைத்தால்

ஜாக்கிரதை ஜாக்கிரதை!


மகள் அணைத்தால் அது

மகமாயி கரிசனம்

மகன் அணைத்தால் அது

ஆன்மாவின் தரிசனம்

அக்காவின் அணைப்பிலே

அம்மா தெரிந்திடுவாள்

அடுத்தவர் அணைத்தால்

ஜாக்கிரதை ஜாக்கிரதை!


சிலரின் அணைப்பு

வில்லத்தனமானது

புறமுதுகில் குத்தும்

கள்ளத்தனமானது!

மலரின் அணைப்பு

வண்டுக்கு இன்பம்

மற்றவர் அணைத்தால்

வண்டுக்குத் துன்பம்!


நல்ல அணைப்பும் உண்டு

பொல்லா அணைப்பும் உண்டு

அணைக்காமல் கொஞ்சுவது பாசம்

அணைத்துக் கொஞ்சுவது மோசம்

குழந்தைகள் நலன் காக்க

சொல்லி வைப்போம்

அயலார்கள் அண்டாமல்

தள்ளி வைப்போம்!



                          



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract