DEENADAYALAN N

Comedy

5.0  

DEENADAYALAN N

Comedy

ஒரு நாயின் பாட்டு!

ஒரு நாயின் பாட்டு!

1 min
183



குறிப்பு:

நாய் நன்றி உள்ள பிராணி!

பல வகையில் மனிதர்களுக்கு உதவியாக இருக்கிறது.

என்றாலும் சில நேரங்களில் நாய்களிடம் மாட்டிக் கொள்ளும்

சமயங்களை நினைத்ததால் எழுந்த பாடல் இது - நகைச்சுவையாக!



நீங்க வீராதி வீரரா

இல்லே சூராதி சூரரா

ரொம்ப ரொம்ப சாரிங்க - நம்ப

‘சாரு’ அதவிட ‘டெரரு’ங்க!


யாரு அந்த ‘சாரு’?

‘நாய்’ அவரு பேரு!

நாயின் கடியை நெனச்சா – பேட்ட

ரவுடி கூட ‘பச்சா’!


இது பஞ்சபாட்டு இல்லே

இத மிஞ்சும்பாட்டும் இல்லே - தெரு

நாயி பாடும் பாட்டு - இதை

‘எஞ்ஜாய்’ பண்ணுங்க கேட்டு!


‘எங்க வீட்டுப் பிள்ளை’

படத்தில் வரும் பாட்டு – ‘நான்

ஆணையிட்டால்’ மெட்டு - அந்த

சந்தத்தில் இன்னொரு ஹிட்டு


(மீண்டும் நினைவூட்டுகிறேன்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ பட்த்தில் வரும்

‘நான் ஆணையிட்டால் பாடலின் சந்தத்தில்

ஒரு நாய் பாடுவது போல் இந்தக் கவிதை/பாட்டு

அமைக்கப்பட்டிருக்கிறது)


( பாடல் ஆரம்பம்.).


நான் ஊளையிட்டால்…

(ம்யூசிக்: உ உ ஊ உ)


கொஞ்சம் குலைத்து விட்டால்

(ம்யூசிக்: லொள் லொள் லொள்…. லொள்)


நான்

ஊளையிட்டால்

கொஞ்சம்

குலைத்துவிட்டால்

இந்த தெருவுக்குள் யாரும் வரமாட்டார்

உயிர்

உள்ளவரை

என்

பயமிருக்கும்

மக்கள்

இரவினில் வெளியே வர மாட்டார்

மக்கள்

இரவினில் வெளியே வர மாட்டார்!


                      (நான் ஊளையிட்டால்)


இங்கு

குழந்தைகள் ஆடவும் ஓடவும் நடக்கவும்

நானா பார்த்திருப்பேன்

ஒரு

சந்து உண்டு

அதில்

பொந்து உண்டு

அங்கு

எப்போதும் கா..த்திருப்பேன்


முன்பு

சைக்கிள் வரும்

பின்பு

‘பைக்’கு வரும்

எந்தன்

பிடியினில் அனைவரும் சிக்குவார்

நித்தம் கடித்திடுவேன்

ரத்தம் குடித்திடுவேன்

இந்த

நா..யின் வெறி அதனைக் காட்டிடுவேன்

சொறி

நாயின் வெறி அதனைக் காட்டிடுவேன்


                        (நான் ஊளையிட்டால்)


நைட்டு

ஷிஃப்ட்டு சினிமா ட்ராமா முடிஞ்சிநீ

வந்துதான் ஆகவேணும்

அப்பொ

புடிச்சிக்குவேன்

உன்னைக்

கடிச்சிக்குவேன்

எங்கும்

தப்பியோட முடி..யாது


ஒன்று

பாதையில் வரும்

ஒன்று

போதையில் வரும்

எந்தன்

கண்களில் எல்லோரும் அகப்படுவார்

பயந்து

அரண்டிடுவார்

துடித்து

துவண்டிடுவார்

இந்த

ரா..ஜா எந்தன்கடி மறக்க மாட்டார்.

இந்த

ராஜா எந்தன்கடி மறக்க மாட்டார்.


                  (நான் ஊளையிட்டால்)


உங்கள்

தொப்புளில் ஊசியும் மருந்தும் மாத்திரையும்

போட்டால் எனக்கென்ன

நான்

தெரு ராஜா

என்னைப்

பண்ணு தாஜா

இல்லைக்

கொத்தோடு புடுங்கிடுவேன்


இங்கு

சட்டம் உண்டு

நல்ல

திட்டம் உண்டு

என்றும்

நாங்கள் பயப்பட மாட்டோம்

சிலர்

காரில் செல்வார்

சிலர்

ஜீப்பில் செல்வார்

பாவம்

சைக்கிளில் வந்து நீ மாட்டிக் கொள்வாய்

பாவம்

சைக்கிளில் வந்து நீ மாட்டிக் கொள்வாய்


                           (நான் ஊளையிட்டால்)



 (ஹம்மிங்..)

லொள்லொள் லொள்…

லொள்லொள் லொள்…

லொள்லொள் லொள்…

லொள்லொள் லொள்…


லொள்லொள் லொள்…

லொள்லொள் லொள்…

லொள்லொள் லொள்…

லொள்லொள் லொள்…



(மேல் பத்தியில் கடைசி இரண்டு வரிகளில் உள்ள அதே ‘டோனி’ல்)

லொள்லொள் லொள்…

லொள்லொள் லொள்…


லொள்லொள் லொள்…

லொள்லொள் லொள்…


லொள்லொள் லொள்…

லொள்லொள் லொள்…





Rate this content
Log in

Similar tamil poem from Comedy