காதலில் இதெல்லாம் சகஜமப்பா!
காதலில் இதெல்லாம் சகஜமப்பா!
ஒன்றா இரண்டா
ஒன்பது மாதக் காதல்!
அன்பு ஆசை பாசம்
அனைத்தும் அடங்கிய காதல்
உனக்கு நான்
எனக்கு நீ என்று
உள்ளம் ஒன்று பட்டு
அர்பணிப்பாய் வளர்ந்த காதல்!
ஆரம்ப நாட்களில்
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
நாசூக்காய் தானிருந்ந்தார்கள்
நெருங்க நெருங்க
நம்பிக்கை வந்தது
போகப் போக
உரிமையும் வந்தது!
கேட்டால் தவறில்லை
என அவன் நினைத்தான்
கொடுத்தால் தவறில்லை
என அவள் நினைத்தாள்
ஆனால்..
இதற்குமுன் இப்படி
நடந்ததில்லை
இதுமாதிரி அவன்
செய்ததுமில்லை
இன்றாவத
ு கிடைக்குமா? – அவள்
கொஞ்சம் பொறு! – அவன்
என்றைக்கு கிடைக்கும்? – அவள்
காதலர்தினம் வரட்டும் ! – அவன்
உறுதியாகவா – அவள்
உறுதியாக – அவன்
காதலர் தினம் வந்தது!
ஆவல் பொங்க
அவனைப் பார்த்தாள்!
‘இந்தா..
நீ கடனாகக் கொடுத்த
இருநூறு ரூபாய்!’
பிரச்சினை தீர்ந்தது
காதல் தொடர்ந்தது!