முருங்கை
முருங்கை


எங்க வீட்டு மரத்திலே
கொத்துக்கொத்தாய் முருங்கைக்காய்
சாம்பாரிலே முருங்கைக்காய்
சத்தான முருங்கைக்காய்
பயற்றுக் குழம்பில் முருங்கைக்காய்
பாங்காய் சமைத்த முருங்கைக்காய்
போண்டா செய்து பார்த்தோமே
ஊறுகாயும் போட்டோமே
ஊருக்கெல்லாம் ஊட்டியும்
உண்ண தீரவில்லையே
கோபம் கொண்ட பாலனும்
கோடாரி எடுத்து வந்தானே.