அம்மா
அம்மா
அன்றொரு நாள் ஊட்டியில்- மாலை வேளையில் குழந்தைகள் வெளியே விளையாட கதவைத் திறந்தேன்.
வாசற்படியில் அம்மா... மூச்சிரைக்க உட்கார்ந்து இருந்தார்... பார்த்ததும்... அதிர்ந்து விட்டேன், "என்னம்மா ?.. எப்போ வந்தீர்கள்..."என்று கூறி அவர்களைப் பார்த்ததும், கையில் காய்கறிப்பை,
"காய்கறி வாங்க வந்தேன். போகும் வழியில் உன்னையும் பிள்ளைகளையும் பார்த்துவிட்டுப் போக வந்தேன்"என்று கூறினார். நீலகிரி மலைத்தொடரில் ஒரு மலை ஏறி மறுபக்கம் இறங்கி என மலையில் ஏறி இறங்கி,ஏறினால் தான் காய்கறி வாங்க போக முடியும்.
அறுபது வயதில்...
மலை மலையாக ஏறி இறங்கும் வயதா என்ன! என்ன செய்வதென்று எனக்கு புரியவில்லை.
இனி வீட்டிற்கு திரும்ப எல்க்ஹில் மலை இறங்கி, மறுமலை ஏறி .... பின்னால் இருக்கும் எதிர்மலை ஏற வேண்டும்!
என் பிள்ளைகளோ பள்ளி செல்லும் பாலகர்கள். துணைக்கு அனுப்பவும் முடியாது;
ஆட்டோ வசதி இல்லை;
கார் இல்லை ;
கணவரும் அருகில் இல்லை; யாரையும் உதவிக்கு கேட்க முடியவில்லை ;
அம்மாவோ....
" நான் போய் விடுவேன்; என்னைப் பற்றி கவலைப்படாதே." என்று எனக்கு தைரியம் சொல்லிவிட்டு சென்றார்கள். அவர்கள் போவதையே நானும் பிள்ளைகளும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
