சடங்கு
சடங்கு
சடங்கு
குழந்தை பிறந்ததும்
பெயர் வைக்கும் சடங்கு
ஒன்றிரண்டு வயதில்
மொட்டை போட்டு
காது குத்தும் சடங்கு
பெண் குழந்தை வளர்ந்ததும்
பூப்பெய்த சடங்கு
மாப்பிள்ளை வந்தால்
பூ வைக்கும் சடங்கு
மணக்கோலத்தில்
மனம்மயக்கும் சடங்கு
மாசமானால்
வளைகாப்புச்சடங்கு
பிள்ளை பெற்றதும்
பிள்ளைப்பேறு சடங்கு
மாமியாராக
பாட்டியாக
வயது ஏற ஏற
பல சடங்கு செய்தபின்
பெண்ணே!
உன் இறுதிச்சடங்கும்
நிறைவாக நடத்த
நின்றார்களே உற்றோர்கள்!
