பூமித்தாய்
பூமித்தாய்
கருவுற்றாள் பூமித்தாய்... இரவும் பகலும் இடைவிடாது இருபத்து நான்கு மணி நேரமும்
சுற்றிச் சுழலும் பூமித்தாய் இனிதே கருவுற்றாள்..
மழை வெயில் வந்தால் என்ன பனிக்காற்று பறந்தால் என்ன பக்குவமாய் காத்திட்டாள்
தன் கருவை பூமித்தாய்.
நேரம் பிறந்தது; வலியும் பிறந்தது;
வேதனையின் நடுவில் வெளியேறிய கரு
பால் வண்ண முகத்துடன் விண்ணில் மிதந்தது தன்முகம் நோக்கியே தன்னையே சுற்றும் தன் மகவுக்கு நிலா என பெயரிட்டு மகிழ்ந்தாள் பூமித்தாய். அமாவாசை பௌர்ணமி என கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் தன் மழலையின் குறும்பைக் கண்டு களிப்படைந்தாள் பூமித்தாய்!
