STORYMIRROR

Dr.Padmini Kumar

Classics

4  

Dr.Padmini Kumar

Classics

அம்மா

அம்மா

1 min
6

வெள்ளென எழுந்திடுவாள்; வாசல் தெளித்து கோலமிடுவாள்; பாத்திரங்கள் துலக்கியதும் பால் காய்ச்சிடுவாள்; பரீட்சைக்கு படிக்க என்று

பிள்ளைகளை எழுப்பி விட்டு காபி கலந்து கொடுத்திடுவாள்;

 தண்ணீர் தொட்டி நிரப்பிடுவாள்;

 தலைக்குக் குளிக்கச் செய்வாள் ;

துணிகளையும் துவைத்து மாடியில் உலர்த்திடுவாள்; காலை டிபன் வேலை முடித்து,

 செல்ல பெண்களை பின்னல் இட்டு, பூ முடித்து, பள்ளிக்கு அனுப்பி வைப்பாள்.

 இவள்..... என் அம்மா... சாத்தூரிலே பிறந்தாள்... சிவகாசியில் புகுந்தாள் .

பத்து மக்களைப் பெற்ற மகராசி!

 இவளை..

 அம்மாவாக அடைய...

 என்ன தவம் செய்தேனோ!


Rate this content
Log in

Similar tamil poem from Classics