தைரியம்
தைரியம்
எட்டி நட பெண்ணே!
கல்வியுலகில் நீ நடை
போட எட்டி நட பெண்ணே!
தைரியமாக நீ
நடக்கும் ஒழுக்கப் பாதையிலே
உன்னைக் கையெடுத்து
கும்பிட்டு ஒதுங்கிச் செல்லும்
கயவாளிகள் கூட்டம்!
ஏடெடுத்து படிப்பதன்
பொருளே வாழ்க்கையில்
நீதியும் தர்மமும்
நிலைநாட்ட என்றே
தைரியமாக காந்தி
வழியில் நடை போடு!
எளிமையின் மறுவடிவமாக
வாழ்ந்த விடுதலை வீரர்களின்
வாழ்க்கை வரலாறுகளை
எண்ணியே நீயும் தைரியமாக
இலஞ்சம் வாங்காமல்
எதிர்த்து நிற்கப் பழகு!
துரோக முட்கள் பாதையிலே
நீ நடை போடாமல்
விலகிச் சென்று
தைரியமாக நடை போட்டால்
இறைவனும் உனக்கு
காப்பாவான்!