பழைய சோறும் பச்சை வெங்காயமும்
பழைய சோறும் பச்சை வெங்காயமும்


பளபளக்கும் பாஸ்ட் புட்டிற்கு
பல் இழித்தாய் !
பன்னாட்டு குளிர்பானத்துக்கும்
பழகிப் போனாய் !
பண்பாட்டையும், பழையவற்றையும்
பழித்தூற்றினாய் !
இப்படியெல்லாம் செய்த நீ
பாரெல்லாம் பரவும் நோயை
பார்த்தும் - உன் விளம்பர
உணவை விட்டு விட்டு,
மருந்தே உணவென்று,
நம் பாராம்பரியமான
பழைய சோற்றையையும்
பச்சை வெங்காயத்தையும் பெருமையாக பருகிமகிழ்கிறாய்.
உணவே மருந்தாய்
தமிழா நீ - வாழ்ந்தாய் அன்று !
மறந்தவற்றை புரியவைத்தான்
கொரோனா இன்று.....! !