அண்ணாச்சி கடை
அண்ணாச்சி கடை


அம்மா கொடுத்துவிடும்
மஞ்ச பையிலிருந்தும் 5 ரூபாயிலிருந்தும்
ஆரம்பிக்கும் அண்ணாச்சி கடை அறிமுகம்
அம்மாவின் நம்பிக்கையுடன்🛍
என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாத அண்ணாச்சி கடை அது
அந்த தெருவில் என்ன காரியம் நடந்தாலும்
அண்ணாச்சி காதில் வந்து விழுந்துவிடும்🏠
மணப்பாட திறனும் மேம்படும்
அம்மா சொல்லி அனுப்பும்
பொருட்கள் மூலம்😊
ஆனால் அத்தனையும் தோற்றுப்போய்விடும்
"என்ன வேணும்?" என்று கேட்கும் அண்ணாச்சியின் அதட்டலில்😇
எப்படியோ தோற்றுப்போனதை எல்லாம்
தேற்றிக்கொண்டு அண்ணாச்சியிடம்
கேட்டுப் பெற்றுக் கொண்ட பின்
கொஞ்சம் இனாமாக கிடைக்கும்
கருவேப்பிலை கொத்தமல்லிக்கு வீட்டில் கிடைக்கும் பாராட்டு அடடா!!😄
பாராட்டு கிடைத்தாலும் மறந்தபோன
பொருளுக்கு குடுகுடுனு ஓடி போய்
வாங்கிய பின்பு, மீதி காசுக்கு என்ன வாங்கலாம் என்று கண்கள் அலைபாயும்🤔
அலைபாய்ந்த கண்கள்
கொண்டு வந்து சேர்க்கும்
தேனில் ஊறிய தேன்மிட்டாய்
டப்புனு உடையும் எல்லுருண்டை
கடுக்கு முடுக்குனு இருக்கும் முறுக்கு
கலர் கலர் டப்பாவில் இருக்கும் சீரக மிட்டாய்
1 ரூபா போலோ
2 ரூபா பைட்ஸ்
அடித்து முடித்த கண்கள்
ஒன்றில் வந்து நிலைக்கும்😋
நிலைத்த ஒன்றை தேர்வு செய்து
எப்ப சாப்பிடலாம்
எப்படி சாப்பிடலாம்
எங்க உட்கார்ந்து சாப்பிடலாம்
என்று யோசித்தவாரே வீடு வந்தடைவோம்😋
சரியாக காகிதத்தை பிரிக்கும் பொழுது
உடன் பிறந்தவள் பங்குக்கு வருவாள்
"தர மாட்டேன் போ" என்று சண்டைப்போட்டாலும் அவள் பங்கை சரியாக வாங்கிக்கொண்டு சாதித்ததை போல் சிரித்து கொண்டு செல்வாள்💃
அவள் சிரிக்க வேண்டும் என்பதற்காகவே
சண்டை போடுவோம்🤗
ஒரு அண்ணாச்சி கடை நம் வாழ்வில் அவ்ளோ சுவாரசியத்தை சேர்க்கும்....