சமூகத்தில் இடமில்லையோ?
சமூகத்தில் இடமில்லையோ?
நாகரிகத்திற்காக மது அருந்துவதாக காட்டிக்கொள்ளும் மேல்தட்டின் செல்வாக்கு மிக்க செல்வந்தர்கள் அருகாமையிலும் ..
குடிப்பது மரியாதையை குறைக்குமென்று மனதிலே இருந்தாலும் முகத்தை மறைத்து மதுவோடு உறவாடும் திட்டமிட்டு செலவிடும் நடுத்தட்டு மக்களிடமும்..
போதைக்கு பாதை தேடி உடல்வலி போக்கிடும் மருந்து மதுவென கூறி மதுவின் பிடியில் சிக்கி இரத்தமும் வியர்வையும் சிந்திய உழைப்பில் வந்த தினக்கூலியின் பெரும்பகுதியை மதுவில் செலவிட்டு குடும்பத்தை பட்டினி போடும் கீழ்த்தட்டு உழைக்கும் மக்கள் கூட்டத்திலும்..
மதுவின் வாசனையையும், சுவையையும், போதையையும் விரும்பாது..மதுவை விட்டும்மது தரும் மகிழ்வை விட்டும் விலகி இருக்கும் சிறுபான்மையினர்..
சமூகத்தில்
ஏதோ ஒரு வகையில் விலக்கி வைக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்..
இரா.பெரியசாமி..