புரட்டாசி
புரட்டாசி
புரட்டாசி மாதம் முழுமைக்கும்
அவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள்
அது ஒவ்வொரு வருடமும்
புரட்டாசி விரதமாய் அனுஷ்டிக்கிறார்கள்
அது கடவுளுக்கான
விரதம் என்கிறார்கள்
அது அவர்களுக்கான
விரதமாகப் பார்க்க மறுக்கிறார்கள்
விரதம் என்பது
உடல் ஆரோக்கியத்திற்கான
நோன்பு
கடவுள் என்பவர்
உண்பவர் அல்ல
விரதம் இருப்பவர் அல்ல
பசியற்ற நிர்க்குணம் படைத்தவர்
பசியுள்ளவர்களுக்கு
எல்லாம் படைத்தளிப்பவர்
எந்த நெய்வேத்தியமும் ருசி பார்த்து உண்பவர் அல்ல அவர்
மனிதன் மூன்றுவேளை
தவறாமல் உண்கிறான்
ஒரு வேளை தின்பவன் யோகி
இருவேளை தின்பவன் போகி
மூன்றுவேளை தின்பவன் ரோகி
நாம் ஒவ்வொருவரும்
நினைத்துப் பார்க்க வேண்டும்
அந்த மூன்றில்
நாம் எந்த பிரிவில்
உள்ளடங்கி இருக்கிறோம்?