STORYMIRROR

Ganesan N

Abstract Inspirational Thriller

4  

Ganesan N

Abstract Inspirational Thriller

மழை

மழை

1 min
525


இயற்கையின் கண்ணீர் அல்ல

மழை மேகங்களின் சேமிப்பு நீர்

தன் சேமிப்பு மிகுதியை

பூமிக்கு மழையென அனுப்பி

சேவை புரிகிறது பருவகாலங்களில்

மழைக்கு பலப்பலப் பெயர்கள்

தூறல்மழை சாரல் மழை

அடைமழை புயல் மழையென

எந்தவொரு மழையாயினும்

அது தன்பணியை நிறைவேற்றி

வெளியேறி விடுகிறது

சிலகாலம் ஓய்வுக்கு பிறகு

மீண்டும் பருவகாலம் தொடங்கி

பூமியில் இறங்கி மண் குளிர

நீர்நிலைகள் நிரம்ப வைத்து

திருப்தியடைகிறது பூரணமாய்

மழைக்கு எப்பொழுது சிரிப்பு

மழைக்கு எப்பொழுது கோபம்

மழைக்கு எப்பொழுது சீற்றம்

வருமென எவருக்கும் தெரியாது?

மழை மனிதனின் எதிர்ப்பார்ப்பு

மழை மனிதனின் பிழைப்புக்கான

உயிர் நீர்

மழையை எப்பொழுதும்

மனிதன் போற்றுகிறான்

மாமழைப் போற்றுதும்

மாமழைப் போற்றுதும்

மா மழைப் போற்றுதும்...!!








Rate this content
Log in

Similar tamil poem from Abstract