STORYMIRROR

Mathi N

Classics Inspirational Others

5  

Mathi N

Classics Inspirational Others

தனிமை

தனிமை

1 min
472

சில மனிதர்கள் நம்மை காயப்படுத்திய போது

நம்மை ஆறுதல் படுத்துவது தனிமை மட்டுமே..

தனிமை..

கொஞ்சம் வித்தியாசமானது நாமாக எடுத்துக் கொண்டால் இனிக்கும்..

அடுத்தவர் நமக்கு கொடுத்தால் கசக்கும்..

 அழுத்தமான பல முடிவுகளையும்.. ஆழமான பல சிந்தனைகளையும்... வழங்கியது என் தனிமை உலகம்.. 

எனது தனிமை...

சில நேரங்களில் இன்பம் ..

எனது தனிமை.... 

சில நேரங்களில் துன்பம்..

 எனது தனிமை..

சில நேரங்களில் வரம்..

 எனது தனிமை..

சில நேரங்களில் சாபம்..

காதலித்தவள் பேசாத நேரத்தில் தனிமைகளுக்கு அடிமையாகுவதை விட..

 தனிமையே காதலித்து வாழ்வதே மேல்..

மன நிம்மதிக்கான தனிமை மகிழ்ச்சியானது... 

ஆனால்..

அன்பு செய்ய யாரும் இல்லாத தனிமை கொடுமையானது.. தனிமையை எண்ணி கவலை கொள்ளாதே மனமே..

தனிமை தான் வாழ்க்கையும் உலகத்தையும்.. 

பல வழிகளில் புரிய வைக்கும்..

மனமே..

தனியாக இருப்பதே சுகம் தான்... கற்பனைக்கு உயிர் கொடுக்கும் கவிதையை கிறுக்கலாம்.. 

நிழலோடு பேசிக்கொண்டு நெடுந்தூரம் செல்லலாம்.. 

யாருக்கும் தெரியாத நினைவினை நினைத்துப் பார்த்து ரசிக்கலாம்...


Rate this content
Log in

Similar tamil poem from Classics