திருமணம்
திருமணம்
இலக்கியம் காட்டும்
களவுத் திருமணம்
வாழ்க்கைக்கு பொருந்துமா!
திருமணம் இல்லாமல்
இணைந்து வாழும்
பதின்ம வயது
இளைஞர்கள் கூட்டம்
பெருகிட சட்டங்கள்
இன்று துணையாக
மேற்கத்திய பண்பாடுகள்
இந்தியாவில் நுழைந்தனவோ!
இனியும் இவ்வாறு
வருங்காலங்களில் நிகழ்ந்திட்டால்
அனாதை இல்லங்கள்
பெருகிடாதோ!
இன்றைய உலகில் சுயநலம்
பெருகி விட்டமையால்
பெற்றோர் பார்த்து வைக்கும்
திருமண நிகழ்வுகள் அரிதாகி விட்டன!
தந்தையின் குடும்ப
கௌரவத்திற்கும் கணவனின்
பாக்கெட் பணத்திற்கும்
இயந்திரகதியில் இயங்கி
திருமண பந்தத்தில் அடங்கி
வெளிக்காட்டிக் கொள்ள முடியாத
மௌனத்தில் பாரதி
காட்டிய புதுமைப் பெண்
நாளிதழ்களில் பாலியல் வன்முறை
தடுப்பு சட்டங்களை இயற்ற
வழி தேடிக்கொண்டிருக்கிறாள்!