அம்பாரி
அம்பாரி


அன்னைக்கு மழலையின்
அணைப்பே அம்பாரி,
அலையாடை ஆழிக்கு
நாவாய்கள் அம்பாரி!!
ஆழ்ந்த ஓர் நித்திரைக்கு
கனவுகளே அம்பாரி...
இரவுகளின்
மையிருட்டில் நிலவொளியே அம்பாரி..
ஈரமான கழனிதனில்
பசுந்தளிரே அம்பாரி...
ஈரடியாம் குறட்பாவில்
வாழ்வியலே அம்பாரி...
உறவுகளின் சூழலுக்கு
உற்சாகம் அம்பாரி!!!
உயிர்த்துடிப்பின் ஆற்றலுக்கு
உடல்தானே அம்பாரி...
ஊக்கமான மனதிற்கு
எண்ணங்கள்தாம் அம்பாரி!!
ஊழ்வினைசூழ்
வாழ்விதற்கு
இறையுணர்வே அம்பாரி
எனை ஈன்ற
தாய் மனதில்
என்நினைவே
அம்பாரி!!
எழுதுகின்ற
கருப் பொருட்கு
என் தமிழே அம்பாரி!!
ஏற்றமான சான்றோர்க்கு
ஆற்றல்தான் அம்பாரி
ஏதுமற்ற மாந்தருக்கு
ஏழ்மைதான் அம்பாரி.
ஐவகையாம் நிலப்பிரிவில்
பருப்பொருளே அம்பாரி!!
ஐயமற்ற
வாழ்க்கைக்கு
ஒளவைச் சொல் அம்பாரி!!
ஒழுக்கமான
நெறிமுறைக்கு
உயர்குணங்கள் அம்பாரி!!
ஒப்பிலா
இறைவனுக்கோ
மறைநூல்கள்
அம்பாரி!!
ஓத்துவிக்கும் ஆசானுக்கு நன்னூல்கள்
அம்பாரி...
ஒளடதம் நாடும் மனதிற்கு
அறிவுைரைகள்
அம்பாரி!!
ஒளைவைக் கிழவி அறிவிற்கு
ஆத்திச்சூடி அம்பாரி!
இஃதெலாம் எழுதும்
எனக்கு கவிமணியே
அம்பாரி!!
எனைெயெலாம்
புனையைை வைத்த
கனித்தமிேழே என்
அம்பாரி!!!