Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Divya Vijay

Classics

4.8  

Divya Vijay

Classics

கடலின் குரல்

கடலின் குரல்

1 min
324


முக்கடலை பார்க்கையில் தான் 

முதன்முதலாய் கடலின் குரல் 

என் காதுகளில் கேட்டது 

பின் உவரியின் மணற்பரப்பில் 

சங்கு பொறுக்குகையிலும் 

தொலைந்த புகாரை கண்களால் தேடுகையிலும் 

கடல் ஒரு மென் குரலில் 

என்னை அழைப்பதை உணர்ந்தேன் 


கடலின் பெரும்பரப்பிலிருந்து 

வெகு வெகு தொலைவில் 

சுருங்கி அடங்கியிருக்கிறது 

என் சிறு வீடு

ஆனாலும் கடலின் குரல் 

ஒரு மெல்லிய அதிர்வாய் 

என்னுள் உள் ஆழத்தில் 

கேட்டு கொண்டே இருந்தது 


என் கடமையில் இருந்து விடுபட்டு 

ஓர் நாள் தீடீரென்று 

கடலின் குரலை தேடி 

பயணம் தொடங்கினேன் 

உலக நடப்பிலிருந்து

முற்றும் விலகிய அந்த 

ஒரு வாரம் முழுக்க நான் 

கடல் ஓரத்தில் அலைந்து கொண்டிருந்தேன் 


முதல்நாள் 

ஆளில்லா ஒரு கடற்கரையில் 

நான் கடலின் குரலை 

தேடி கொண்டிருந்தேன் 

எல்லையில்லாமல் எல்லாவற்றிலும் 

கவிழ்ந்து பரவியிருந்த இருளை 

கண்ட அன்றைய நாள் 

நான் இருளின் குரலை 

தெரிந்து கொண்டேன் 


இரண்டாம் நாள் 

சூரியன் மேலெழும்பிய 

விடிகாலை கடலில் அதன் 

குரலை தேடி கொண்டிருந்தேன் 

அன்பை போல் களங்கமில்லாத 

வானத்தின் சௌந்தர்யத்தை 

கண்ட அன்றைய நாள் 

நான் வானின் குரலை 

தெரிந்து கொண்டேன் 


மூன்றாம் நாள் 

முதிர்ந்த ஒரு மீனவனின் படகில்

நான் கடலின் குரலை தேடி 

போய் கொண்டிருந்தேன் 

கொடுத்தாலும் எடுத்தாலும் காதலோடு 

கடலிடம் பேசிய மீனவனை 

கண்ட அன்றைய நாள் நான் 

மீனவனின் குரலை தெரிந்து கொண்டேன் 


நான்காம் நாள் 

ஒரு மலைஉச்சியிலிருந்து 

நான் கடலின் குரலை 

தேடி கொண்டிருந்தேன் 

காலங்கள் ஒளிந்து உறைந்த 

மலையிடுக்குகளையும் பாறைகளையும் 

கண்ட அன்றைய நாள் 

நான் ஒரு மலையின் 

குரலை தெரிந்து கொண்டேன்


ஐந்தாம் நாள் 

பிண ஊர்வலம் சென்ற 

கடற்கரை சாலையின் ஊடே

நான் கடலின் குரலை 

தேடி கொண்டிருந்தேன்

நிலையில்லா வாழ்க்கையின் 

நிலையை நன்கு உணர்த்திய 

மரணத்தை கண்ட அன்று 

நான் வாழ்வின் 

குரலை தெரிந்து கொண்டேன்


ஆறாம் நாள் 

மழை தூறும் மாலை கடலில் 

நான் கடலின் குரலை 

தேடி கொண்டிருந்தேன்

மெல்லிய இசையாய் மனதில் 

ஈரம் கசிய செய்த மழையை 

கண்ட அன்றைய நாள் 

நான் மழையின் 

குரலை தெரிந்து கொண்டேன்


ஏழாம் நாள் 

நான் எதையும் தேடவில்லை 

நிர்ச்சலனமின்றி என் மனம் 

அடங்கி உள் ஒடுங்கியிருந்தது 

இப்போதும் எல்லையில்லா பெருங்கடல் 

முன் சுருங்கி அமர்ந்திருந்தேன் 

அப்போதும் கடலின் குரல் 

என்னை கூப்பிட்டு கொண்டுயிருந்தது 


ஆனால் நான் தெரிந்து கொண்டேன் 

கடலுக்கு என்று தனி 

குரல் எதுவுமில்லை 

அது பல குரல்களின் 

பெரும் சங்கமம் 

இத்தனை தேடலுக்கு பிறகு 

அதில் என் குரலும் கலந்துவிட்டது 

கடலின் தோழியின் குரலாய்......


 



Rate this content
Log in

Similar tamil poem from Classics