ஹாப்பி ரக்க்ஷா பந்தன்
ஹாப்பி ரக்க்ஷா பந்தன்
முந்தி பிறந்தவனுக்கும் பிந்தி பிறந்தவனுக்கும்
இடையில் பிறந்தவள்
இவள்...
கைப்பிடித்து கொண்டு
நடக்கும் போது
யாராவது கேட்டால்
இவள்
அன்பினால் உருவான என்
தங்கை என்று
அண்ணன் சொல்வார்.....
அதே,
இன்னொருவனிடம் கேட்டால்
என்னா சொல்வான் தெரியுமா?
இவள் என்னுடைய
ராட்சசி
என்பான் என் தம்பி...
அன்பிற்கு பஞ்சமில்லை
இவர்களுக்கு....
என் எண்ணங்களை எண்ணியதும்
நிறைவேற்றுவார்
அண்ணன்....
குருக்ஷே
த்திரத்தையே
மிஞ்சிடுவான்
தம்பி
சண்டையில்....
அடுத்தவரிடத்தில்
விட்டு கொடுக்காதவன்...
பாசமான வார்த்தைகாளால்
பாசத்தை வெளிக்காட்டுவார்
அண்ணன்
கேலி கிண்டல்களால்
பாசத்தோடு விளையாடுவான்
தம்பி...
அக்கா என்ற உறவால் நான்
அம்மாவாக மாறி என்
மகனாக அவன் உருவாகிறான்
அண்ணன் தந்தை ஸ்தானத்தை
பெற்று,
உடன் பிறந்தவர்களை மக்களாய்
ஏற்றுக்கொள்கிறார்.....
உங்கள் அன்பினால் உருவான இவளின் வாழ்த்துகள் ...!!!
ஹாப்பி ரக்க்ஷா பந்தன்
என் உடன்பிறப்பே.... !!!