அனாதையின் ஆசிரியருக்கான நன்றி
அனாதையின் ஆசிரியருக்கான நன்றி
ஓர் அனாதை இல்லத்தின் ஆசிரியர்க்கான நன்றி
#ஆசிரியர் தினம்
#நன்றி ஆசிரியர்
சுட்டெரிக்கும் சூரியனும் சிறிது எட்டிப் பார்த்தான் ...
சுமந்தவள் சுமை எனக் கருதி விட்டு சென்றால் என்று ....
பைத்திங்கள் படுத்துறங்கிய பல்லக்கினை நான் விடுத்து பல்லாயிரம் மைல் கல் தொலைவில் பொடி நடையாய் ஓர் பயணம்...
எதிர்பாரா கனவுகளுடன் எதிர்பார்த்த நிபந்தனைகளுடன் அனைக்கும் கரங்கள் கொண்ட அனாதை இல்லத்தை அடைந்தேன்...
அம்மையப்பன் இல்லா வாழ்வினில் அன்பிற்கும் இடம் அளித்தாள்..
அறிவிற்கும் வழிவகுத்த
ாள்.
கடந்து வரும் வாழ்க்கை கடலினில் கரை சேராத படிமங்கள் பல...
துணை சேர்ந்த துடுப்புகளும் சில..
குரு துரோணாச்சாரியாரின் அன்பு சீடன் அர்ஜுனனாக நான் இருந்தது காரணமோ என்று தெரியவில்லை இன்றுவரை என் நலன் அறிந்து மகிழ்கின்றாள்..
இதற்கெல்லாம் என் ஓர் வாழ்வின் நன்றி வார்த்தைகள் போதாது..
#Thankyou Teacher
மறுபிறவி ஒன்றும் எனக்கு வேண்டாம்..
இக்கணம் ஆழி அலையாய் அலைகொளிக்கும் எனது ஆசிரியையின் அன்பு ஒன்றே போதும்...
#Thankyou Teacher