இந்தியதேசத்தில் அனாதையின்கனவு
இந்தியதேசத்தில் அனாதையின்கனவு


பெருங்கடலை பிரதியெடுத்த நீலவானில் கருங்குழல் உலர்த்துவதாரோ....
அனுமதியின்றி கருங்குழல் உலர்த்துவதே குற்றம்...
குற்றமெனினும் இறுமாப்புள்ள இயற்கையே உன்னில் வெண்ணிற சிறுமல்லி வைத்ததாரோ.....
ஓர் இரவின் அழகினில் அனாதையின் கனவு வரிகள் இது...
ஒன்றுமறியாத வரத்தால் வந்து விழுந்த தேகம் இது...
விழித்திறந்த போது தெரியாத முகங்கள் கொஞ்சி நின்ற நேரமது...
அற்பனாய் வாழும் சொற்ப ஜுவியின் கனவும் இது
ஓடி ஓடி அர்த்தமற்று வாழும் அனாதை கண்ட கனவு கவிதை இது...
கருவேலங் காட்டில் சுற்றித்திரிந்த கஸ்தூரி மான் போன்ற காலமது...
காரிருளும் கழுத்தை இறுக்கும் பாம்புகளும் எனைத் தீண்டும் கனப்பொழுது மூச்சிரைக்க ஓட்டமெடுத்த வாழ்வது...
தொய்வுற்ற என்னிரு புஜங்கள் மித்திரன் தோள் மீது ஓய்வு கொள்ள ஆசை கொண்டது...
கட்டித்தழுவி ஒரு முத்தம் தர அன்னையின் பொற்பாதங்களை தேடி நின்றது ...
அலைபாயும் என் நெஞ்சில் அறிவுரையை ஏற்க தந்தையின் சொற்பொழிவுக்கு ஏங்கி நின்றது...
ஓர் தட்டில் ஐ விரலாய் பல கைகள் உறவுகொள்ள உண்ட சோற்றை விட சிந்தியதே அதிகமென ஆர்ப்பரித்துக் கொள்ள பல உறவுகளைத் தேடி உலாவிக் கொண்டிருந்தது
எண்ணிய உடனே கிடைக்கப்பெற இவை எனக்கு எளிதானவையா?
சில பிறவிகளில் கடவுளுக்கே கிடைக்காத அட்சயப் பாத்திரம் என்று அடங்கிப் போனேன்...
அச்சமயம் எனக்குள் ஒரு இழையுமா என்றார் கடவுள்...
அம்மா அப்பா இல்லாத அனாதை பிறவி எடுத்தேன் நானும்
ஆனால் கலங்கியதில்லை கனப்பொழுதும்..
ஆர்ப்பரிக்கும் உலக கொண்டதோ மனித ஜாதி
இங்கே அனாதைகள் எல்லாம் கடவுள் ஜாதி...
சாதி என்றொரு சொல் உண்டு
ஆனால் சாதிகள் பல...
மதம் என்றும் சொல் உண்டு மதங்களும் பல ...
பாகுபாடு இல்லாத சமூகத்தை பாழ்படுத்தும் பிளம்புகளே பிரிவினையை புகட்டும் பிரிவுகள் எதற்காக உன்னிடம் ??
ஒற்றுமை உணர்த்தும் ஒற்றைச் சொல்லாக உறவுகள் என்று ஒரு சொல் உண்டு அல்லவா...
பிரம்மனின் வாசமான சொர்க்கத்தின் வாயிலைக் கொண்ட இனிய பாரதமே...
குருதிப்புனல் எடுத்த உனது நாட்டில் அமைதிப் புயலாய் அகிம்சை வழி எடுத்து சுதந்திரம் எனும் முகாந்திரத்தை அடையப் பெற்றாய்... இந்நாளில் அனாதைக்கும் உண்டு இல்லங்கள்
அவர்களை ஏற்க எங்குண்டு மென்மை உள்ளங்கள்...
நீதி அரசர்களை படைத்த எமது படைப்பினில் ஓட்டுரிமையை நோட்டுகளாக மாற்றியவர்கள் நீங்கள்..
விற்பனைக்கில்லா பொருட்களுக்கா
இங்கு வழங்கள் அட்டை...
கேட்டால் குடும்ப அட்டை என்கிறீர்கள்...
சாதி மத இன கொள்கைகளை வீட்டிற்குள் கழற்றி வைத்து வாசல் தாண்டிடுவீர் இந்தியனாக....
இந்தியா எனும் கூட்டு குழலில் நான் இந்து ,கிறித்தவன் இஸ்லாமியன் என மார்தட்டிக் கொள்ளாதே மனிதம் அழிந்து போகும்....
நீர் இந்தியர் என அடிவயிறு கிழிய உரக்கச் சொல்..கேட்பார் செவி கிளியட்டும்..
சமத்துவ பாரதம் என்ற உண்மை புரியட்டும்..... ஒவ்வொருவர் பிறவிப் பயனும் முழுமை பெறட்டும்...
இறுதியாக ஒன்று உறைக்கிறேன்....
பாஞ்சாலியின் தூகில் காத்த கிருஷ்ணருக்கும் கேட்டிராத நிர்பயாவின் நீதிக்கு நின்றவர்களும் நீங்கள்தான்...
ஐந்தறிவு ஜீவன்களின் நீதி காத்த அரசர்களும் நீங்கள்தான்....
நிற்கதியாய் நிற்கும் நிராயுத பெண்களின் புத்துயிர் பெற வைக்க வேண்டியது நீங்கள்தான்....
கடவுளின் கருத்திற்கு கைதட்டினர் யாவரும்.... சுதந்திர இந்தியாவும் புத்துயிர் பெற்று எழுந்து நிற்கும் என்ற நம்பிக்கையில்......
நன்றி