STORYMIRROR

Uma Subramanian

Inspirational

5  

Uma Subramanian

Inspirational

காதல் செய்வோம்

காதல் செய்வோம்

1 min
527

காதல் இன்றி

உயிர்கள் ஏது?

உலகம் ஏது?

உறவுகள் ஏது?

மொழி ஏது?

விழிதான் ஏது?

உயிர் தான் ஏது?

கண் மீது இமை 

கொண்ட காதலும்

மதுவின் மீது வண்டு

 கொண்ட காதலும் 

புவி மீது

 திங்கள் கொண்ட காதலும் 

திங்கள் மீது அல்லி 

கொண்ட காதலும்  

புவி இரவியைச் சுற்றுவதும்

இரவியைக் கண்டு 

கமலம் முகம் மலருவதும் காதலினால்!

காதல் இன்றி எதுவும் இல்லை!

ஆதலினால் காதல் செய்வோம் வாரீர்!

காதலை விட சொர்க்கம் ஏது கேளீர்!

கேளிர்காள்!

காதலே...

 உலகை இயக்கும் சக்தி!

உயிரை இயக்கும் யுக்தி!

காதல் வந்தால்... 

மோதல் போகும்!

மோதல் போனால் ...

சாதல் போகும்!

காதல் வந்தால்... 

சுற்றம் பெருகும்!

சீற்றம் குருகும்! 

இயற்கையைக் காதலி!

இன்பத்தை அனுபவி!

நீரைக் காதலி!

சீராய் அனுபவி! 

உணவைக் காதலி!

உறவைக் காதலி! 

 காற்றைக் காதலி!

சேற்றைக் காதலி!

நாற்றைக் காதலி! 

ஊற்றைக் காதலி!

மழையைக் காதலி!

மொழியைக் காதலி!

மண்ணைக் காதலி!   

முதலில் உன்னைக் காதலி!

உன்னைப் போல் உலகைக் காதலி!

காதலுக்கென்ன வேலி?

காதலுக்கு காதலே கூலி! 

காதலின்றி ஏது வையம்? 

காதலிக்க என்ன ஐயம்?


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational