நாங்களும் வாடகைத் தாயே
நாங்களும் வாடகைத் தாயே


பெற்ற கடன் தீர்க்க ...
பெற்ற கடன் செய்ய ....
வெளிநாடு சென்ற
காளையராய்.....
இந்தியக் காளைகள்!
ஜெர்ஸி சிந்து இன
காளையருக்கு
வாடகைத் தாயாய்
இந்திய பசுக்கள்!
பணம்! பணம்!
தேவை பணம் ஒன்றே!
கணிகையரே...
தனிமைக் கொடுமை
உங்களுக்கு மட்டுமல்ல...
எங்களுக்கும் தான்!
கருத்தரிப்பு ஊசி
உங்களுக்கு மட்டுமல்ல
எங்களுக்கும் தான்!
மருந்து மாத்திரை
உங்களுக்கு மட்டுமல்ல
எங்களுக்கும் தான்!
இயற்கையை எல்லாம்
செயற்கையாக்கி...
மலடாக்குவது
மண்ணை மட்டுமல்ல
எங்கள் மடியையும் தான்!
மனிதா,
விழித்துக் கொள்!
பிழைத்துக் கொள்!