STORYMIRROR

Vasumathi Vilvaaranimurugan

Abstract Inspirational

4.9  

Vasumathi Vilvaaranimurugan

Abstract Inspirational

பெண் எனும் பேரொளி

பெண் எனும் பேரொளி

1 min
968


வாடுவோம் என அறிந்தும்

சிரிக்கும் மலர்போல,

வாட்டங்கள் தாக்கும் என தெரிந்தும்

மலர்பவள் பெண் !

ஒருமுறை வாடியபின் மறுபடி 

சிரிக்காது மலர்;

பலமுறை சோர்வுற்றும் 

அன்று பூத்த மலராய்,

தினம் தினம் சிரிக்கும் பெண்ணே!

மலரல்ல நீ.....

வெட்ட வெட்ட துளிர்த்து வளரும்

வேரே நீ !

 

அழகான நடைபோட்டு,

காடுமலை தாண்டிக்

கடலுடன் கலக்கும் நதி,

கொடுமை நிறைந்த சமூகத்தில் 

அழகாய்

அன்னநடை போட்டு

காதலில் இணைபவள் பெண் !

கடலுடன் கலந்தபின் தன்னுரு 

>

தொலைத்து மறையும் நதி;

காதலையும் அழகாக்கி

தன் பெருமையும் மறக்காமல்

சிறப்பூற்றும் பெண்ணே !

நதியல்ல நீ.....

மண் செழிக்க வான்மகள் தூவும்

மழையே நீ !

 

இதமாய் முகம் வருடி

சிலிர்ப்பிக்கும் தென்றல்,

கனிவாய் மனதைத் தீண்டி

இதம் தருவாள் பெண் !

கடந்த நொடியிலேயே மறையும்

தென்றலின் தாக்கம்;

ஒருமுறை கடந்தாலும் 

வாழ்நாள் முழுதும் மென்மையாய்

வாசம் வீசும் பெண்ணே !

தென்றலல்ல நீ.....

நொடியில் நாசி நுழைந்து

இதயத்திற்க்குயிரூட்டும்

மூச்சுக்காற்றே நீ !


Rate this content
Log in

Similar tamil poem from Abstract