என் உளரல்களின் தொகுப்பு
என் உளரல்களின் தொகுப்பு


இப்பக்கத்தின் பெயர் காரணம்
பெருங்கவிஞரும், ஞானியரும் தோன்றிய
மன்னில் பிறந்ததால்.....
வாழ்வியலின் பொருளை உலகுக்குணர்த்திய
கலாச்சாரத்தில் தோன்றியதால்.....
தென்றல்மகள் பாடி உலவிய வயல்களின்
இயற்க்கையை ஸ்வாசித்ததால்.....
பாசத்தின் பயனை ஊட்டி வளர்த்த
உற்றார் படைத்ததனால்.....
காதலை என்னுள் விதைத்து மலர்வித்த
துணைவன் கொண்டதனால்.....
சமூகவியலும், அறிவியலும் பகிர்ந்து உயர்வித்த நண்பர்கள் சூழ்ந்ததனால்.....
என்னோடு போராடி மூளையை கூராக்கிய
ஆசான் கிடைத்ததனால்.....
அழகிய தமிழ் வார்த்தைகளோடு விளையாடும்
திறமை கொண்டதனால்.....
மட்டுமே,
எனது வரிகள் 'கவிதை'யாகாது.....
ஆதலால் தான்
இக்கவிதையின் தலைப்பு
'என் உளரல்களின் தொகுப்பு'