மனம் கூறியது!
மனம் கூறியது!


நகையை அடகு வைத்து
விழா முன்பணம் பெற்று
முத்தரப்பு கூட்டம் போட்டு
முழு மூச்சாய் ஓடி ஓடி
பிறந்தவளுக்கு சீர்வரிசை...
அக்கா தங்கை அன்பு பிள்ளைகளுக்கு....
தாய்மாமன் தீபாவளி பணம்....
பெற்றவர்களுக்கு புதுத்துணி..
நாம் பெற்றதுக்கு புதுத்துணி ...
கட்டினதுக்கு ஒன்றுக்கு ரெண்டு புடவை
பலகாரம் பட்சிணம்
மத்தாப்பு வாணவேடிக்கை
வடை பாயாசம் கறி மீன்
எல்லாம் முடித்து
ஏப்பம் விட்ட பிறகு தான்
நினைவில் தட்டுது!
வந்த பணமெல்லாம்
ராக்கெட்டாய் பறந்து போக
மிச்ச நாளை எப்படி கடத்துவதென!
தலை சங்கு சக்கரமாய் சுற்றி விட
மனம் சுக்கு நூறாய் வ
ெடித்து போக
வெடித்து போட்ட காகிதங்கள்
குப்பையாய் வீட்டின் முன்!
இதிலாவது 100 200 மிச்சம்
செய்திருக்கலாம் !
யார் விடுவர்?
புஸ்வானமாய்!
கண்ணிமைக்கும் நேரத்தில் ...
எல்லாம் கடந்து போனது!
வரவெல்லாம் கரைந்து போனது!
இரவெல்லாம் நித்திரையின்றி
சித்தம் கலங்கி விட...
மனம் கூறியது....கலங்காதே! இதுவும் கடந்து போகும்....
ஒன்றிரண்டு மாதங்களில்
கடன் கூட தீர்ந்து போகும்..
மகிழ்வித்து மகிழ்ந்து பார்!
வாழ்க்கை கொஞ்ச காலம் தான் என்று!
தெளிந்தேன் எழுந்தேன் மகிழ்ச்சியோடு நடந்தேன்
அலுவலகம் நோக்கி...
அடுத்த அலுவல்களை நாடி!