துப்புரவு தொழிலாளியின் பிச்சை
துப்புரவு தொழிலாளியின் பிச்சை
காக்கையாய் நான் இருந்தாலும்
உங்கள் எச்சிலில்
கரோனா இருக்கலாம்!
பறந்த என் சிறகுகள்
வலிப்பதற்காக
இறங்கிய மர நிழலில்
நான் வேண்டுவது
நிறைந்த டயப்பர்களும்
பயன்படுத்திய சானிடரி
நேப்கின்களும் பிளாஸ்டிக் குப்பைகளும் அல்ல!
தூய மரநிழல்
உங்களுக்கு அளித்த
ஆக்சிஜனை சுவாசித்தபடி
வீட்டில் இருந்து
குழந்தைகளின் கழிவுத்துணிகளை
அலசி பெண்களின் துணிகளை
அலசி சூரிய ஒளியில் காய வைத்து
துப்புரவு தொழிலாளிக்கு
உதவலாமே!
இதயம் இருப்பவர்கள்
கவனிப்பார்களா!