நேர்மையில் உரிமை
நேர்மையில் உரிமை


நேர்மையில் உரிமை
#Seedhibaat
#சீதிபாட்
காண கண்கோடி இருந்தும் பல நாட்கள் குருடாகி போனதேன் ?
வாழ ஓர் பூமி இருந்தும் வானம் இருட்டாகி போனதேன் ?
கரைமீள அலை முயன்றும் கடல் வாழ எல்லையிட்டதேன் ?
சிறை மீள மனம் முயன்றும் புவி வாழ தடையுமிட்டதேன் ?
இங்கு ஆடைக்கு சண்டையிட்டு போர்வைக்கு தந்தோமே வரம்..
நீயதியும் நேர்மையும் மூர்ச்சையாகி விடும் வேளையில் தர்மத்திற்கு மௌனம் அளித்ததால் வந்து விழுவதே சாபம்..
ஓர் வழி மறுக்க மறுவழி திறக்க நாதமும் மாறும் சுவரமும் மாறும்..
இங்கு காலச்சக்கரம் நிச்சயமாக உண்மைக்கு பல்லக்குத் தூக்கும்.. பாரியின்
தேரில் பாரையே வலம் செய்யும் ...
ஒளிதரும் போலி நிழல் காண கண்கள் வேண்டாம் ....
காரணம் கேட்க காதுகளும் வேண்டாம்..
அன்பு யாசகம் பெற கைகளும் வேண்டாம்....
இத்தனையும் ஏற்றால் ஏற்றம் காணாத ஊனமாவேன்.....மாற்றம் காணாத குருடாவேன்..
ஏற்றம் காணும் வரை மௌனத்தை தியானம் ஆக்குவேன்.. தீயென பற்றுவேன்... நீதானே என ஏளனமாக தீண்டி டாதே...
தான் நல்லவன் என்பதை காட்டிக்கொள்ள, சுற்றத்தின் சாயல்களை, சாயங்களாக மாற்ற நினைப்பவர்களுக்கு
சாயம் ஒருநாள் வெளுத்துவிடும் என்பது புரிவதில்லை...
நேரடியாக உணர்த்தி வாழும் வாழ்வினில் தூணாய் திகழும் உறவுகளுடையிலும் இனி நேர்மையாக ( #சீதிபாட்) வாழ்ந்திடவே வளம் பெறுவேன்