சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி
சின்னஞ்சிறு சிட்டுக்குருவி சீமையிலே காணலையே
சிங்கார மாளிகையில் சிறுவிடமும் கிடைக்கலையோ
சிடுசிடுன்னு இடமெல்லாம் போட்டிபோட்டு பறந்திடுவ
சிறுசாகூட சத்தமில்ல சிறகுடைஞ்சு கிடக்குறியோ
சின்னசின்ன ஒட்டையில கூடுகட்டி வாழ்ந்திடுவ
சின்னதொரு ஒட்டைககூட சீமையிலே கிடைக்கலையோ
வழவழன்னு புழுக்கள்தான் வற்றாமே தேங்கிருக்கே
வரும்பசி யாற்றக்கூட வந்துநீ போகலையோ
பலபலன்னு பூச்சிதான் பலவிதமா இருக்கையிலே
பசியாற உனக்குதான் பட்டிணம்வரை பிடிக்கலையோ
அங்கங்கே மின்கம்பம் அடுத்தடுத்து இங்கிருக்கே
அத்தனையும் உனக்கேதான் வீடுகட்ட வருவாயோ
சலசலன்னு காத்துவரும் சாலைப்பூங்கா இங்கிருக்கு
சத்தம்போட்டு விளையாட சத்தமில்லாம வாராயோ
மணிமாறன் கதிரேசன்
