ஹைக்கூ
ஹைக்கூ
1 min
568
1
மாதத்தின் கடைசி நாள்
அவசரத்திற்கு தின்பண்டம் ஆகும்
ஊறவைத்த அரிசி
2
சுவற்றிலேறிய கிறுக்கல்கள்
சுற்றிச் சுற்றி ரசிக்கிறார்
வீட்டு உரிமையாளர்
3
ஜென் ஞானம்
பழகப் பழக பிடிபடும்
எளிமையின் இலக்கணம்
4
மின் வெட்டு
எந்த பாதிப்புமின்றி உறங்கும்
நடைபாதை வாசிகள்
5
கண்ணீருடன் மகன்
பிறந்தநாள் பரிசாக அம்மாவின்
ஆயுள்காப்பீடுப் பணம்