STORYMIRROR

Ananth Sivasubramanian

Action Classics Children

5  

Ananth Sivasubramanian

Action Classics Children

நண்பனே

நண்பனே

1 min
546

என்னுடன் தினமும் விளையாடுபவனே

நான் துயரத்தில் இருக்கும்போது தோள் கொடுப்பவனே

என் உணர்ச்சிகள் நன்றாய் அறிந்தவனே

நான் தடுமாறும்போது என்னை தாங்கி பிடிப்பவனே

நான் சோர்ந்து போகும்போது கை கொடுப்பவனே

என் துயரத்தை உன்னுடையதாய் கருதுபவனே


என் வெற்றிக்கு காரணமானவனே

இருக்கும் இடத்தை சிறப்பிப்பவனே

எனக்கு எந்நேரத்திலும் உதவுபவனே

என்னிடம் உரிமையோடு பேசுபவனே

என் புன்னகைக்கு காரணமானவனே

எனக்காக சண்டை போடுபவனே

என்னை நேசிப்பவனே

எனக்கு தோல்வி ஏற்படும் போது ஊக்குவிப்பவனே

ஒளிவு மறைவு இல்லாமல் பேசுபவனே

ஒரு நாளும் என்னை பிரியாதவனே

எதிர்பார்ப்புகள் இன்றி இருப்பவனே

நான் சொல்லும் நகைச்சுவைக்கு சிரிப்பவனே


நீ எனக்கு கிடைத்த புதையல்

நான் நினைப்பதை அப்படியே செய்பவனே

எதற்கும் துணிந்தவனே

என் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவனே

பாசத்திற்கு அடையாளமானவனே

பண்பிற்கு சான்றாய் விளங்குபவனே

என் இதயத்தில் நீங்கா இடம்பெற்றவனே

உன்னைப் போல் ஒரு நண்பன் கிடைத்திடவே

என்ன தவம் செய்தேன் நான்


Rate this content
Log in

Similar tamil poem from Action