கொக்கரிக்கும் கொரோனா
கொக்கரிக்கும் கொரோனா


குறுகுறுக்கும் கனவுகளுடன்
நித்தமும் வலம் வந்த
வாழ்விற்கு ஒரு தடை -
இது ஏன் என்று புரியாத
புதிராக இயற்கை
அனைவர்க்கும் வைக்கும்
ஒரு அழுத்தமான பரிட்சை!
விடை என்னவென்று தெரியாது
தவித்து நிற்கும் இந்த பொழுதுகள்
என்று தான் முடியும் என்று
தெரியாது மனதிற்குள் தடுமாறும்
நீயும் நானும் தனித்திருக்க
மனதில் ஒரு நம்பிக்கையுடன்
விடிந்திடுமா நாளைய விடியல்?