STORYMIRROR

Deepa Sridharan

Abstract

4.4  

Deepa Sridharan

Abstract

ஈழத்து ஈரம்

ஈழத்து ஈரம்

1 min
395



மரணம் உறையச்செய்யும்

 என்பதை அதைத் 

தடவிப் பார்த்துதான்

கற்றுக்கொள்ள முடிந்தது

அவர்களுக்கு

அண்டார்ட்டிக்கா ஏன்

செவ்வாயிலும் கூட

உலாவ அனுப்பினார்கள்

தன்மான மனங்களை

அங்கேயும் ஒரு மூலையில்

மனித வாசம்

அம்மனங்களை அம்மணமாக்கி

மணத்துக்கொண்டிருந்தது. 

அவர்கள்ரணங்களைப் பிளந்து 

ரத்தம் குடித்தே 

பசி அடக்க

ின 

சிலமலக் கிடங்குகள்.

ரணங்களுக்கு மருந்து 

போட மறந்து 

போன பயம் 

மரத்தும் போனதால்!

செம்மண்ணைக் குழப்பி

 மூஞ்சியில் அப்பிக் கொள்ளும் 

ஒர் விளையாட்டை

தாய் மார்பில்

பால் குடித்தறியா

அப்பிள்ளைகள் பங்கருக்குள்

விளையாடிக் கொண்டன

பசியடைத்த அப்பிள்ளைகள் 

செவியில் பீரங்கிச் சத்தம்

 கேட்கவேயில்லை!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract