STORYMIRROR

Deepa Sridharan

Inspirational

4.3  

Deepa Sridharan

Inspirational

அவள் கூத்தாடப் பிறந்தவள்

அவள் கூத்தாடப் பிறந்தவள்

1 min
714


தெய்வீகப்படுத்தாதே

அவளை

கருப்பை கொண்டதாலே

கடவுளாக்காதே

கடவுள்கள்

பிழையற்றவையாம்

ம்

இருந்தால் தவறிருந்திருக்கும்

அறிவு தீண்டாதவற்றில் 

பிழைகள் தெரிவதேது

அவள் அறியப் படுபவள்

பிழை திருத்தி

 வாழத் தெரிந்தவள்

அவனைப் போல்

அவைகளைப் போல்

வேறு வடிவமாய்

 வடிந்து கிடக்கிறது

 இரத்தமும் சதையும்

புனிதப் படுத்தாதே

அவள் தேகத்தை

புனிதம் பொத்தி வைக்கும்

தனதாக்கிக் கொள்ள நினைக்கும்

அவள் உடல்

உண்ண உறங்க 

உழைக்க களிக்க 

ஆக்க மரிக்க

வளர்க்கப் பட்டது

அதில்உணர்வுகள் 

சேர்க்கப்பட்டது

அவனைப் போல்

அவைகளைப் போல்

நீருக்கோர் குணம்

நெருப்புக்கோர் குணம்

குணம

் கலைந்தால்

இரண்டும் சமம்

அவளுக்கும் ஓர் குணம்

தலையில் தூக்கி 

வைக்காதே அவளை

பாரம் அடிமையாக்கும்

பயணத்தைக் கடுமையாக்கும்

உடன் பழகப்பிறந்தவளவள்

கை கோர்த்து நடை பயிலத்

 துணிந்தவள் அவள் 

அவனைப் போல் 

அவைகளைப் போல்

அவளை அனைத்திலும்

அங்கமாக்கிக்கொள்

அதனை 

நிதம் சகஜமாக்கிக்கொள்

அவள் என்பது

உள்ளடிங்கினால்

மகளிர் தினம்

என்பது 

மறைந்து விடும்.

கொண்டாட நினைக்காதே

அவளை

கொண்டாட்டம் காரணம் பார்க்கும்

அளவுகோல் கேட்கும்

அவள் 

கொண்டாடப் பிறந்தவள் அல்ல

கூத்தாடப் பிறந்தவள்

இப்பிரபஞ்சத்தைச்

சேர்ந்தாளப் பிறந்தவள்

அவனைப் போல்

அவைகளைப் போல்!


Rate this content
Log in