STORYMIRROR

Uma Subramanian

Inspirational

5  

Uma Subramanian

Inspirational

எனது வங்கி

எனது வங்கி

1 min
35K

விழாக்களில் 

அடம்பிடித்து உனை வாங்கி....

கையிருப்பு வங்கியை கூட்டவே...

பார்க்காத தாத்தா பாட்டியை....

 தினம்.... தினம் பார்த்து பேசி நைசா....

பக்குவமா வாங்குவோமே பத்துப்பைசா...  

தீபாவளி.... பொங்கல்.... திருவிழாக்கள் ..... 

என்று வரும் என ஏக்கத்தோடு பார்த்திருப்போம்!

தாத்தா பாட்டி..... 

அத்தை மாமா... 

உறவினர் வருகையை ஆவலோடு காத்திருப்போம்! உனை நிரப்ப.... 

அப்பா அம்மாவை ஏமாற்றி 

கையிருப்பைக் கூட்டி.....

காணும் கணமெல்லாம் களிப்பு கூடிடுமே!

கால்கள் குதூகலத்தில் ஆடிடுமே....  

கையிருப்பு கரைந்து போய்விடில்....

ஆத்திரம் அவசரசத்திற்கு இருப்போமே உனை நம்பி....

நிதி நிலை நெருக்கடி ஏற்படும் போது..... 

நீயே உலக வங்கி!

கால் கடுக்க காத்திருக்கல....

காத தூரம் கடந்து போகல.....

விண்ணப்பம் ஏதும் எழுதிக் கொடுக்கல....

வேண்டும் போது நீயே வங்கி....

குல சாமிக்கோயிலுக்குப் போக....

நேந்துகிட்ட நேர்த்திக்கடன் தீர்க்க....

சேர்த்து வைப்போம்.... சிறுக.... சிறுக....

பார்த்து பார்த்து வைப்போம்.....

சாமி பயம் கிடுகிடுங்க!

பல்லெல்லாம் பரபரங்க....

பட்டாணி வாங்கி கொறிக்க...

மிட்டாய் வாங்கி கடிக்க...

உனைத்தொட....

ஆவலில் மனது துடிக்க...

சாமி பயத்தில் மனது அடிக்க.....

மறந்து விடுமே ஆசையெல்லாம்!

இப்படியே.... சேர்த்து வைத்த சிறுசேமிப்பு பழக்கமெல்லாம் இன்று காணாமலே போச்சு....

சின்னஞ்சிறுசுகிட்ட சேமிப்பு பழக்கம் இல்லாமல் ஆச்சு....  

சேமிப்பை ஊக்குவிப்போம்!

 சிறு துளி பெருவெள்ளம்.... ஆக்குவிப்போம்!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational