புன்னகை
புன்னகை
புன்னகை....
ஆயிரம் பொன்னகையின் அழகை....
ஒரு புன்னகை மிஞ்சி விடுகிறது!
மனதின் அழகைக் கூட்டி....
மனக் கவலையை போக்கும் மாமருந்து!
இரத்த ஓட்டத்தை சீர் செய்யும் இயற்கை மருந்து!
மருத்துவம் ஆற்றாத மன அழுத்தத்தை ஒரு புன்னகை ஆற்று கிறது!
வாய்விட்டு சிரிக்கத் தெரிந்த மிருகம் மனிதன்!
சிந்திக்கும் மிருகமும் மனிதனே!
ஆனால் சிரிக்கவும்..... சிந்திக்கவும் மறந்து....
கடிவாளம் கட்டிய குதிரை களாய்....
வாழ்க்கைப் பயணத்தை கடப்பது தான் கொடுமை!
வாழ்க்கை யில் எதை தொலைத்தோம்? என்பதைக் கூட மறந்து.... !
சிரிப்போம்! சிரிக்க வைப்போம்!