நினைத்தாலே இனிக்கும் எங்கள் நா
நினைத்தாலே இனிக்கும் எங்கள் நா


பூமியில் ஒளிரும்
புண்ணிய தேசம்
உலக மக்களின்
ஒப்பற்ற புன்னகை தேசம்
மாமனிதர்கள் உதித்த
அதிசய தேசம்
அகிம்சை வழியை
உலகிற்கு வழங்கிய
கலங்கரை விளக்கம்
அமைதி தவழும்
அற்புத தேசம்
மனநல்லிணக்கம் நிறைந்த
சொர்க்க பூமி
நல்லொழுக்கத்தையும்
நன்னெறிகளையும்
நாளும் போதிக்கும்
நினைத்தாலே இனிக்கும் நாடு
எங்கள் பாரத மணித்திரு நாடு.
விண்ணில் சொர்க்கம் தேடி
அலையும் மனிதர்களுக்கு
மண்ணில் சொர்க்கம் காட்டும்
அன்றும் இன்றும் என்றும்
இந்தியா.