முனைவர் மணி கணேசன்

Abstract

4  

முனைவர் மணி கணேசன்

Abstract

யானைகள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிவிதம்

யானைகள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிவிதம்

1 min
340


அடக்கப்பட்ட யானை

அடிமையாய் கிடந்து

பிச்சையெடுத்து சேவகம் செய்யும்!


கும்கி யானை 

சாதித்திமிரில் கௌரவ, ஆணவப் 

படுகொலைகள் புரியும்!


மதம் பிடித்த யானை

மதக் கலவரமும் வெறுப்பரசியலையும்

முன்வைத்து நாட்டையே நாசப்படுத்தும்!


புத்துணர்வூட்டப்பட்ட யானை

சுக போகத்தில் சக உயிரிகளிடத்தும்

வன்புணர்வு காட்ட துடிக்கும்!


அடக்கப்படாத அமைதியான

அரசியல் யானை ஒன்றே

சமூக நீதி 

சுயமரியாதை

மொழிப்பற்று

மாநில சுயாட்சி என

இனமாக இணைந்து

இன்பமான வாழ்க்கையை

மகிழ்வித்து மகிழ்ந்து

அறத்துடன் வாழும்!


யானைகள் பலவிதம்

ஒவ்வொன்றும் ஒரு விதம்!


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్