சுதந்திர காற்று நம் உயிர் மூச்சு!
சுதந்திர காற்று நம் உயிர் மூச்சு!
சிறகில்லா பறவை
முள்வேலிக்குள் முனகும் அகதி
வலிந்து பூட்டப்பட்ட கைவிலங்கு
சங்கிலியில் சிக்கிய குடிநீர் குவளை
மூச்சை அழுத்தும் மூக்கணாங்கயிறு
ஒடுக்கியாளும் தாலிக்கொடி
பரிசோதனைக்குட்படும் பரிதாப எலி
சுட்டி விரல்களுக்குள் அல்லாடும் தட்டான்
சாராயம் புகட்டப்படும் வேடிக்கை ஓணான்
நூலில் ஊசலாடும் பட்டம்
முதல் குருதி கண்ணுற்ற பருவப்பெண்
அரைஞாணில் சிறைப்பட்ட சுட்டிமழலை
இவர்கள் ஓங்கி சொல்வார்கள்
சுதந்திர காற்று நம் உயிர் மூச்சு என!