STORYMIRROR

Delphiya Nancy

Abstract Inspirational

4  

Delphiya Nancy

Abstract Inspirational

பழங்காலத்து வீடு- நம் கருவறை

பழங்காலத்து வீடு- நம் கருவறை

1 min
388

பழைய காலத்து வீட்டின் ஜன்னல் தென்றலிடம் நட்பு கொள்ளும்

அதில் பறவைகளுக்கும் எட்டுக்கால் பூச்சிக்கும் தனி இடமே உண்டு!!!


வீட்டின் முன் கட்டிய நெற்கதிர்களை

கொறித்துண்ண வரும்

சிட்டுக் குருவியுடன் சினேகம் கொள்ளும்

அந்த வீட்டின் மழழை !!!


ஒட்டடை அடிக்கையில்

பல்லி முட்டை விழுந்து விட்டால்

அதன் இடம் தேடி வைத்து மகிழ்வோம்

பாவம் அதுவும் உயிர் தானே!!!


செத்த மீனுக்கு

கல்லறைக்கட்டி அழுவோம்

பாவம் எறும்பென்று

தீனியும் வைப்போம்

பச்சோந்தி புதைத்த இடத்தில்

காசு வரும் என தேடுவோம்!!!


பழங்கால வீட்டோடு இணைந்த

கல்லம் கபடமற்ற மனது இது

காக்கைக்கும் விருந்து வைக்கும்

காயம் பட்ட நாய்க்கும் மருந்து வைக்கும்!!!


வீட்டின் ஒவ்வொரு அணுவிழும்

நம் அனைவரின் ஸ்பரிசங்களையும்

உணர்வுகளையும், நினைவுகளையும்

சேமித்த வீடு இன்று அநாதையாய்

நிற்கிறது பல இடங்களில்!!!


நம் அனைவரையும்

சுமந்த கருவறை அது

அதை கல்லறையாக்கி விடாமல்

அடிக்கடி சென்று

அளவளாவிவிட்டு வாருங்கள்

பாவம் அது நம் உணர்வில் பாதியல்லவா!!!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract