இயற்கையை காப்போம்..!
இயற்கையை காப்போம்..!
காலைக் கதிரவனும் தோன்றிற்று.!
அதிகாலைச் சேவலும் அழகாகக் கூவிற்று.!
தென்றலும் வந்து மெல்லத் தீண்டிற்று..!
வேட்டையாடும் நிமித்தம் காட்டிற்கு செல்லத் தயாரானான் அந்த குறவன்!
ஆநிரை மேய்க்கத் தயாரானான் அந்த ஆயன்!
வயலுக்கு செல்ல தயாரானான் அந்த உழவன்!
முத்தாய்ப்பாய் முத்துக் குளிக்க தயாரானான் அந்த பரதவன்!
இப்படி அனைவருக்கும் வாழ்வளிக்கும் இயற்கையை போற்றிக் காப்பது நம் கடமையல்லவா..???
மழையை வாரி வழங்கி
பூமியைச் செழிக்கச் செய்யும் பசுமைக் காடுகளைக் காப்போம்..!
எதிர்பார்ப்பின்றி காலமெல்லாம் நமக்கு பிராண வாயுவை கொடுக்கும்
வானுயர் மரங்களைக் காப்போம்..!
நமக்கெல்லாம் உணவளிக்கும் வயல்வெளிகளை
செயற்கை உரங்களினால் சீரழிய விடாது காப்போம்..!
உலகிற்கு உணவுகளை அள்ளித் தரும், மீனவர்களின் வாழ்வாதாரமாம் கடல்களை இரசாயனக் கழிவிலிருந்து காப்போம்..!
இவைகளை இன்று காக்காவிட்டால்,
நாளைய நம் தலைமுறைகள் எப்படி இங்கு வாழ முடியும்...???