கானகம்
கானகம்
யார் வேண்டுமானாலும்எவை வேண்டுமானாலும்ஆக்கிரமித்துக் கொள்ளும் கானகம்- ஆங்கேகொட்டிக் கிடக்கும்அமைதித் துகளை ஒத்திக்கொண்டே எதிர் திசைகளில் மினுக்கிச் செல்கின்றன சூரியனும் சந்திரனும்இறுதியாய் ரீங்காரமிடும்வண்டதனைத் தேடி அக்குளத்து நிலவில் துழாவுகின்றன சிறுமீன்கள்வாடிய குளத்தாங்கரைத்தேன் பூக்களின் வாசத்தில் அவைகளுக்கு எப்படியோதெரிந்து விட்டிருந்ததுஅவ்வண்டு அன்றுஇறந்து விடும் என்றுநெட்டை மரத்தின்கிளை ஒன்றில்திசை மறந்தபறவைக் குஞ்சொன்று இறகுக்குள் புதைந்தகுட்டைக் கழுத்தைஅங்கும் இங்கும்திருப்பித் தாய்ப்பறவையைத் தேடுதுஎனக்கதன் கூடும் தெரியும்தாயும் தெரியும்ஆனால் அதற்கென் மொழி தெரியவில்லை! புடைத்த வேர்களுடன்புடைத்தன கண்களும். குமுறல் புழுக்கள்அக்குஞ்சின் அலகில்பருவக் கண்ணாடிபார்த்தே அலங்கரித்துக் கொள்ளும்கானகம்-ஆங்கேநித்தமும் திருவிழாகளிப்பதும் அளவிலாயாரும் கேட்பாரில்லை எதுவும் உரைப்பாரில்லைஆங்கே தொலைந்ததும் வாழும்வாழ்ந்ததும் தொலையும்யார் வேண்டுமானாலும்எவை வேண்டுமானாலும்ஆக்கிரமித்துக் கொள்ளும் கானகம்!