பேசுவாயா.....
பேசுவாயா.....
அகன்ற விழிகளினால்
உணர்த்திடும் ஆயிரம்
அர்த்தங்களை நான்
புரிந்து கொள்ள இன்னும்
ஒரு பிறவி தான் வேண்டும்!
காதல் நீரோடிய
கண்களின் ஆழத்தினில்
என்னை நான்
என்று உணர்வேனடி?
மை எழுதிய கண்களின்
இமைகள் படபடக்க
என் இதயத்திற்கு
நீ அனுப்பிய எண்ணற்ற
சேதிகளை மொழி பெயர்த்திட
எனக்கு ஏன் தெரியவில்லை!
ஆயிரம் வார்த்தைகள்
எனக்கு அறிவிக்காதவற்றை
உன் பார்வையின் கூர்மையினால்
தூதாக்கினாய் இன்று!