என்னவள்
என்னவள்


உன் ஒற்றை பார்வையில்
என் நெற்றி முடிக்கும் கூசி
வானம் பார்த்து நிற்குதடி...
உன் ஓர இதழ் புன்னகையில்
என் மொத்த உலகமும்
சித்தம் கலங்கி நின்றதடி...
உன் கண் இமை
மூடி திறக்கும் நொடியில்
நெஞ்சில் மின்னலடித்து
மின்சாரம் பாயுதடி...
உன் வியர்வை துளி
நெற்றி நனைக்கையில்
என் கைகள் இரண்டும்
சாமரமாய் காற்று வீசுதடி...
உன் பாத சுவடை பார்க்கையில்
என் கால் விரல் அனைத்
தும்
பித்துபிடித்து உன் பின்னே
சுற்றி திரியுதடி...
உன் நெற்றி வகுடு நெளிவுகளில்
என் ஒற்றை வாழ்வு வழி மறந்து
உன் கருங்குழல் காட்டில்
தொலைந்து போனதடி...
உன் பிறை முகம் பார்க்கையில்
கூரையின் வழியே தெரியும்
தாரகை நீ என்று மனம்
குழம்பி கூச்சல் போடுதடி...
உன் அன்பெனும் அழகை
காண்கையில் என் அறிவு
அகிலம் மறந்து உன் அன்புக்கு
அடிபணிந்து அடிமையாய்
ஆனதடி...