நெஞ்சில் உரம் இட்டுக்கொள்
நெஞ்சில் உரம் இட்டுக்கொள்


நெஞ்சில் உரம் இட்டுக்கொள்...
உன் நெற்றி துளி வேர்வையில் வெற்றி கொடிகள் வேர் ஊன்றி நிற்கட்டும்!!
நெஞ்சில் உரம் இட்டுக்கொள்...
உன் சமத்துவ சித்தாந்தங்கள் சிகரம் ஏறி சிறகு விரிக்கட்டும்!!
நெஞ்சில் உரம் இட்டுக்கொள்...
உன் உதட்டில் இருந்து உதிக்கும் வார்த்தைகள் அன்பு எனும் அறத்தை போதிக்கட்டும்!!
நெஞ்சில் உரம் இட்டுக்கொள்...
உன் மனிதநேய மாண்புகள் மண்ணை பிளக்கும் விதையாய் முளைக்கட்டும்!!
நெஞ்சில் உரம் இட்டுக்கொள்...
உன் அறிவு எனும் அரிவாள் பிற்போக்கு சிந்தனை எனும் பேதைமைகளை வேர் அறுக்கட்டும்!!!!!!!!!