பதியவள்
பதியவள்
1 min
296
பொன்னிற மாலையில்
புதிரான பெண் அவளின்
புரியாத கண்களுக்குள்
புரியாமல் மாட்டிக்கொண்டேன்!!!
அந்த கண் மையில்
அவள் கன்னக்குழியில்
அவள் சாயம் பூசா இதழில்
அறிவிழந்து அகிலம் மறந்து
சிக்கி கொண்டேன்!!!
உடை நேர்த்தியில்
உற்று நோக்கிய விழியில்
உதட்டிலிருந்த உதிர்த்த தமிழில்
உலகம் அறியா சிறுவனாய்
உரு மாறிய என் உள்ளத்தை
கண்டுகொண்டேன்!!!
நீல விழி பார்வையில்
நெற்றி சுருக்க கீற்றுகளில்
இட்டு இருக்கும் திருநீற்றால்
நாத்திகனான நானும் ஆத்திகன்
ஆகலாமோ என்று ஆசை
கொண்டேன்!!!
கை வீசி அவள் பேசுகையில்
கவி பாடும் காதோர முடியும்
கனவாகி போவதற்குள்
கவிதை புனைந்து நனவாக்கி
நகைத்து கொண்டேன்!!!