உன்னால்... 💖
உன்னால்... 💖
1 min
455
கவலைகளை மறக்க கற்றுக்கொண்டேன்
புன்னகையை விரும்பி
சூடிக்கொண்டேன்
பயத்தை தூர துரத்தி
அடித்தேன்
தைரியத்தை வளர்த்து
எனதாக்கிக்கொண்டேன்
இதழ்விரித்து சிரிக்க
ஆரம்பித்தேன்
சிந்தித்து செயல்பட
தெரிந்துகொண்டேன்
கவிதை இயற்ற
ஆசைக்கொண்டேன்
காதலை காவியமாக்கும்
எண்ணம் வளர்த்தேன்
இசையின் இனிமையை
புரிந்துகொண்டேன்
இயற்கையின் அழகை
ரசிக்க துவங்கினேன்
காத்திருக்க
பழகிக்கொண்டேன்
கண்ணால் பதில் பேச
தொடங்கிவிட்டேன்
என்னை புதிதாக பார்க்க
துவங்கினேன்
உன்னால்
உன் அன்பான காதலால்...