முதலும் முடிவும்
முதலும் முடிவும்

1 min

246
மனம் விரும்புதே
உன் மௌனத்தை
என்னிலை மறந்து
உன்னை நான் ரசித்திட
நாளும் பொக்கிஷமே
ஒரவிழிப் பார்வை
நீ புரிந்திட
மரணிக்கிறேன் பல தருணங்களில்
ஒப்பனையில்லா உந்தன்
ஒளிரும் முகம் கண்டு
உலகமும் உறைந்து போகுதடி
எந்தன் முகவரியும் அதனால் தொலையுதடி
தாய்மொழியாய் உன்னை நேசிக்கிறேன்
சேயாய் என்னை தாங்குவாயா
இந்த கணமே
தொலைந்து போக வேண்டும்
உனக்குள் நான்
புரியாத புதிரல்லவே
எந்தன் நேசம்
என் ஜன்னலின் வழி தெரியும்
அழகு ரோஜாவே
கரம் சேரும் நாள் எப்போதோ
எந்தன் முதலும் முடிவாக நீயே