STORYMIRROR

Siva Kumar

Romance

4  

Siva Kumar

Romance

சிவப்புக்கல் மூக்குத்தி.....!

சிவப்புக்கல் மூக்குத்தி.....!

1 min
229

"ஒருத்தி என்னை நேசிச்சு....

உசுராதான் நினைச்சு....

தன் கையாலே போட்டு விட்ட...

சிவப்புகல் மூக்குத்தி...

அவன் மனசின் காதலைத்தான்

அனுதினமும் சொல்லுதடி....

நான் இழுக்கும் சுவாசமெல்லாம்...

மூக்குத்தி வழியோடி.....

அவன் நினைப்பை.....

சுமந்து கொண்டு.....

நெஞ்குழி நிறைக்குதடி....

ஒற்றைக்கல் மூக்குத்தி....

அவன் உதிரத்தின்....

வேர்வைத் துளி.....

ஒய்யாரமாய் என் மூக்கில்...

மின்னுதடி......

அதில் அவன் உசுரேதான்....

என் கண்ணில் தெரியுதடி.......

எனக்கு அவன் தான் சாமி...

என் இதயம் சுற்றுகின்ற பூமி...

அவன் வெச்ச பாசத்துக்கு...

அந்த ஆழ்கடலும் பத்தாது...

நீல வானமதும் போதாது....

என் இதயக்கூடு மட்டும்தான்...

அதை அடக்கி வச்சிருக்கு....

அது ஒன்னே போதுமடி....

என் உசுரும் அதில் சேருமடி...

நான் செஞ்ச புண்ணியமோ...

கடவுள் தந்த கண்ணியமோ..

அவனை என்னில் சோ்த்தானே...

அதில் என் வாழ்வை வார்த்தானே..

என் ஆத்தா அப்பன் செஞ்ச தவம்...

அவன் ஆத்தா அப்பன் .....

கொடுத்த வரம்....

எனக்கு நாயகனா....... 

இமைபோல காவலனா......

என் ஜென்மம் நிறைத்தானே....

ஏழு ஜென்மம் தொடர்வானே.....

அவனிட்ட மூக்குத்தியில்....

என் ஆயுசும் அடங்கி இருக்கு....

அவன் ஜென்மம் முடியும் வரை...

அதற்கும் உசுர் இருக்கும்.....

அவனோடு சேர்ந்து போக......

அதுமட்டும் உடல் ரெண்டு....

ஆனாலும்....

ஒத்த உசுரா தானிருப்போம்....!

ஒத்துமையா சேர்ந்திருப்போம் ...!!

ஒன்னாவே வாழ்ந்திருப்போம்...!!!



Rate this content
Log in

Similar tamil poem from Romance