என் மகிழ்ச்சி......!
என் மகிழ்ச்சி......!


"வீட்டுக்குள் வந்த வெண்ணிலாவோ
என் வேதனை தீர்த்த பெண்ணிலாவோ
ஆயிரம் துன்பங்கள் மனதில்......
அத்தனையும் மறைந்ததடி உன் சிரிப்பில்...
உன் முகம் பார்த்தால் கொஞ்சம் நிம்மதி.....
நீதானே நான் தொழும் சந்நிதி......
உன் மௌன மொழியாலே......
பல மயக்கும் கதை பேசுற.....
என் மனதின் கதவோரம்.....வந்து
மயிலிறகால் விசிறி வீசுற.....
உன்னை அள்ளி எடுத்து அணைக்கயிலே..
என் நெஞ்சமெல்லாம் நிறையுதடி....
உன் அஞ்சு விரல் பதியயிலே.....
நான் அந்தரத்தில் பறக்குறண்டி...
நீ கொடுத்த முத்தத்தில்.....
உன் இதழோற எச்சில் துளி.....
என் கன்னம் நனைக்கயிலே...
அது புனித தீர்த்தமாக......எனக்கு
புத்துணர்ச்சி அளிக்குதடி....
காலும் கையும் கொஞ்சம் ஆட்டுற...
என் கவலையெல்லாம் தூற ஓட்டுற....
கண்களால் கவிதை எழுதுற....
என்ன காணாட்டி
நீயும் அழுவுற....
தூங்கும் போது உன் முகத்தில்....
அந்த சாமியத்தான் நான் பார்குறேன்....
என் கனவுப் பாதையெல்லாம்....
உன் கைபிடித்து நான் நடக்குறேன்....
எந்த ஜென்ம புண்ணியமோ......என்
மகளா நீ பொறந்தே....இந்த தந்தை
அன்பு சிதறாமே தங்கமே....
உனக்குத் தாரேன்.......உன்னை
கண்ணில் வைத்து காத்திடுவேன் ...
கடவுளை போல் நினைத்து......
கலங்காம நீயுறங்கு......
என் மார்பு மெத்தையிலே.....
உலகமே உன் உருவில் .....என்
கையில் தவழுதடி.....உதிரமே....
நீ அழுதா ஈரக்கொல நடுங்குதடி...
உன் சிறு கண்ணீருக்கும்....என்
மனம் தாங்காதடி....அப்பனின்
இளமனச ஆத்தாடி நீ புரிஞ்சுக்கோ....
ராஜ்ஜியந்தான் இல்லையினாலும்
நீதான் என் இளவரசி.....உன்னை
சீறோடும் சிறப்போடும் என்றும்
வளர்பதில்தான் என் மகிழ்ச்சி.....